மதுரையில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சோலை எஸ்.பரமன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை பெத்தானியாபுரத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கி வரும், ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சோலை எஸ்.பரமன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அறக்கட்டளை பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சமூக சேவகி கார்த்திகை செல்வி மற்றும் ஜெகநாதன் யோகேஸ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
