கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகம் சார்பாக கருத்து கேட்பது கூட்டம்..!

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகத்தின் கருத்து கேட்பது கூட்டம்

கடலூர் ஆகஸ்ட்

மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கட்சி வேண்டும் என்ற லட்சியத்தோடு, மதுரையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சி மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் மதுரையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அதன் நிர்வாகிகள் எம்.பாண்டியன் மற்றும் மதுரை சாமுவேல்ராஜ் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று மாற்றுத்திறனாளிகளிடம், புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகம் கட்சி குறித்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகம் சார்பாக கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளோடு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாவட்ட பிரதிநிதிகளையும் வரவேற்று, கழகத்தின் தேவை குறித்து எம்.பாண்டியன் பேசினார்.

இக்கூட்டத்தில் கடலூர் மகேந்திரன், விழுப்புரம் தினகரன், கள்ளக்குறிச்சி சாமுவேல், பாண்டிச்சேரி ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.நமது ஒற்றைவிரல் நமக்கானது என்ற கருத்தை வலியுறுத்தி, மதுரை சாமுவேல்ராஜ் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் ஜெயபால் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *