ஈரோட்டில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம்

ஈரோடு ஆகஸ்ட்

ஈரோட்டில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள்
மதுரை மாவட்ட
தலைவர் வி.கணேசன்,
பொருளாளர் கார்த்திகேயன்,
இணைச்செயலாளர்
வைரப்பிரகாசம்
மாநில சட்டச் செயலாளர்
சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது மதுரை மாவட்ட தலைவர் கணேசன் பேசுகையில்:- மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் குடும்பங்களும் முழு பயனை அடையவில்லை என்பதையும், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேர்ந்தால் அட்டையை காண்பித்தவுடன் அனைத்து மருத்துவ செலவினையும் அரசே ஏற்க ஒப்பந்தப்படி வேண்டியும்,
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் அனைத்து ஆசிரியர்களின் நலனுக்காக டி.இ.டி தகுதித் தேர்வை நடத்த தமிழக அரசை நிர்பந்திக்க வலியுறுத்தியும்,
அரசு அறிவித்தபடி திருமண முன்பணம் தொகை ரூபாய் 5 லட்சத்தை மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலேயே ஒப்புதல் அளித்து ஆசிரியர் குடும்பங்கள் பயன்பெற வலியுறுத்தி பேசினார். மேலும் இதுகுறித்த கோரிக்கை மனுவை நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்களிடம் மாவட்ட தலைவர் கணேசன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *