மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரிக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது.

மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரிக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது..!

மதுரை அக் 09

மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரிக்கு, இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி), நியூடெல்லி மூலம் 2025 முதல் 2030 வரை 5 ஆண்டுகள் செல்லும் வகையில் “Autonomous” (தன்னாட்சி) தகுதியை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரி, தற்போது மேலும் கல்வி தரம், பாடத்திட்ட சுதந்திரம், தேர்வு முறைகள் மற்றும் மேம்பட்ட கல்வி நடவடிக்கைகளில் முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுத்த கல்லூரி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர் குழு, முன்னாள் மாணவிகள், தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *