மதுரை வடக்கு மாவட்டம், திமுக பொறியாளர் அணி சம்மட்டிபுரம் பகுதி அமைப்பாளராக ம.ஆனந்தகுமார் நியமனம்..!

மதுரை வடக்கு மாவட்டம், மேற்கு தொகுதி, திமுக பொறியாளர் அணி சம்மட்டிபுரம் பகுதி அமைப்பாளராக ம.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ஆனந்தகுமார் கூறுகையில், என்னை திமுக பொறியாளர் அணியின் சம்மட்டிபுரம் பகுதி அமைப்பாளராக நியமனம் செய்த தமிழக முதல்வரும், கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மதுரை மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கும் மற்றும் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் எஸ்.கே.பி கருணாநிதி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் கலை கார்த்திகேயன், சம்மட்டிபுரம் பகுதிச் செயலாளர் தவமணி, பழங்காநத்தம் பகுதி செயலாளர் சுதன் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சிவமுருகன், வட்டக்கழக செயலாளர் ராஜேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

பின்னர் மதுரை வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி (மேற்கு தொகுதி) சார்பாக விராட்டிபத்து பகுதியில் உள்ள தாய் வீடு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பொறியாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *