விஸ்வகர்ம ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மாநில தலைவர் தங்கராஜ் வழங்கினார்
கோவில்பட்டி செப்
மதுரையில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி அன்று, தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பாக, விஸ்வகர்ம ஜெயந்தி விழா, ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் டாக்டர் பி.எஸ்.நாதன் 103-வது பிறந்த நாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ அவர்களை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மாநில தலைவர் தங்கராஜ் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார்.
உடன் சங்க பொதுச்செயலாளர் எஸ்.என் டாக்டர் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ்.வி.கே ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட துணை பொதுச்செயலாளர் பேச்சியப்பன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெருமாள், மதுரை மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.தங்கையா ஆகியோர் உள்ளனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்.
