முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை செப்
மதுரை மாவட்டம் மேலூரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, மேலூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெ.வைரவன் தலைமையில் ஏழை, எளியோருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சைமன் பல்தேசிங், கே.வி.வி.ரவிச்சந்திரன், பாண்டி, பாஸ்கரன்,பரமசிவம் பனங்காடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமசாமி, அய்யனார், பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
