உலக சாதனை நிகழ்ச்சியை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

உலக சாதனை நிகழ்ச்சியை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு தொடங்கி வைத்தார்.

மதுரை அக்

மதுரை வள்ளலார் அறிவு ஒளி கலைப் பண்பாட்டு அறக்கட்டளை மற்றும் VIDIYAL EDUCATION AND EMPOWERMENT TRUST இணைந்து நடத்திய ஒரு மணி நேரம் தொடர்ந்து பத்து விதமான சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் அழகர் கோவில் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே கவிக்குமார், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை‍‍ சிலம்ப ஆசான்கள் மு.ராமர், மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *