திருப்பூரில் சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை

திருப்பூரில் சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை

திருப்பூர் ஏப்

திருப்பூரில் சிலிண்டர் பதுக்கும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா? மேலும்
சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வணிக பயன்பட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்கிற பீதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மக்கள் பீதி அடைய வேண்டம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், திருப்பூரில் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வணிக சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலிண்டர் பெரும் தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *