மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்..!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்..!

மத்திய அரசு நிறுவனம் சார்பில்
அமைக்கப்பட்டது

மதுரை மே

நெய்வேலி தெர்மல் பவர் நிறுவனமும் பெட்கிராட் நிறுவனமும் இணைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்
மணிக்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 5-இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நெய்வேலி தெர்மல் பவர்
நிர்வாக அலுவலர் அனந்தராமானுஜம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ்குமார் ஆகியோர் தலைமையேற்று குத்து விளக்கேற்றி
திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் பெட்கிராட் நிர்வாக இயக்குநர் எம்.சுப்புராமன், NTPL -CSR அலுவலர் ரகுபதி, மீனாட்சி அம்மன் கோவில் உபயதாரர் சுதர்சன், அரசு ராஜாஜி மருத்துமனை
கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆர்.எம்.ஓ.க்கள் டாக்டர் முரளிதரன், டாக்டர் சரவணன், மற்றும் பெட்கிராட்
தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் மும்பை கண்ணன், பொதுச்செயலாளர் அங்குசாமி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *