மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கிய ROYAL SOUCO முன்னாள் மாணவர்கள்
மதுரை அக்
மதுரை சௌராட்டிரா கல்லூரியில் ROYAL SOUCO 1974-78 ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்கள் சார்பாக,
திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ வரதராஜா தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நாகல்நகர் சௌராட்டிரா சபை தலைவர் எஸ்.எஸ்.கே அருள்ஜோதி, பேராசிரியர் எல்.ஆர்.கோவர்தனன்,எஸ்.பி.ஐ வங்கி முன்னாள் மேலாளர் ஜே.கே ரமேஷ்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். ஐ.ஓ.பி வங்கி முன்னாள் மேலாளர் ஆர்.கே.விஜயன், மற்றும் முரளிதரன், ஆடிட்டர் கே.ஏன்.கே. ரகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.ஆர் கோபிநாதன் வரவேற்று பேசினார். சௌராஷ்டிரா சபை செயலாளர் வி.ஆர் சாந்திலால், துணைச் செயலாளர் சந்திரசேகர், சுதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ROYAL SOUCO 1974-78 நிறுவனரும், மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே பாலயோகி மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் டி.எஸ் சௌந்தரராஜன், கவிஞர் டி.ஆர் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் ஐஎப்எஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் எஸ்.ஆர் ரவீந்திரன் நன்றியுரை கூறினார்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
