தகுதி தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ..

தகுதி தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை மாவட்ட தலைவர் கணேசன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.:-

  1. குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஆர்.டி.இ 14.2009 ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டாலும் அது 23.08.2010இல் தான் அமலுக்கு வந்தது.

  2. 2.23.08.2010 முதல் அமலுக்கு வரும் இந்த மத்திய அரசின் சட்டத்தை தமிழ்நாடு அரசு தனது அரசாணை எண்.90 நாள் 28.03.2012 மூலமும் மேலும் அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகள் நாள் 16.11.2012 மூலமும் தமிழ்நாட்டில் மேற்கூறிய இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு 16.11.2012இல் இருந்து தான் அமல்படுத்தியது.
  3. 3.தமிழ்நாடு அரசும் அதன் பள்ளிக்கல்வித் துறையும் வெளியிட்ட அரசாணை எண்.90 நாள் 28.03.2012 மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் நாள் 16.11.2012 ஆகியவைகள் மிகத் தெளிவாக கூறுகின்றன. அதாவது 16.11.2012க்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் 16.11.2012க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைத் தான் இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவு படுத்தியுள்ளது.
  4. 4.மேற்கூறிய இந்த தெளிவுரைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் 2009க்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் ஒவ்வொரு ஆண்டும் நியமிக்கப்பட்டு, பல பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளனர். தேர்வு நிலையும் சிறப்பு நிலையும் பெற்றுள்ளனர்.

  5. 5.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து 16 ஆண்டுகள் கழிந்த பிறகு, இப்போது உச்சநீதிமன்றம் பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அதாவது பல இலட்சம் ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளில் தகுதித் தேர்வு டி.இ.டி (TET) எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் இல்லையென்றால் அவர்களை பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், 19.2025 அன்று உச்சநீதிமன்றம், ஆசிரியர் சமுதாயத்தையே நிலைகுலைய வைக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இயற்கை நியதிகளுக்கு முற்றிலும் முரணான தீர்ப்பு என்று ஆசிரியர் சமுதாயமே கருதுகிறது.
    தமிழ்நாட்டில் 2012 இல் இருந்து தான் ஆர்.டி.இ சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆகவே 2012 க்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து, அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை தொடர்ந்து பணிபுரியவும், பணிமூப்பு அடிப்படையில் உரிய பதவி உயர்வு பெறவும் ஆர்.டி.இ சட்டத்திற்கு, தேவையான விதி திருத்தத்தை எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாங்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாத்திட மாநில அமைப்பின் சார்பாக கனிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை, மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் சந்தித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன்,
மாவட்ட தலைமையிடத்து செயலாளர் சுரேஷ்குமார் மாநில சட்ட செயலாளர் சபாபதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு (TET) தகுதி தேர்வில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி மனு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *