2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்குவார்கள். டாக்டர் பா.சரவணன் அறிக்கை..

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்குவார்கள் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது என்று அடிக்கடி ஸ்டாலின் தனக்குத்தானே பெருமையாக பேசி கொள்கிறார்,

இன்றைக்கு தமிழகத்தின் நிர்வாக சீர்கேட்டு காரணமாக கடந்த நான்கரை ஆண்டு காலம் நீதிமன்றங்கள் மூலம் இந்தியாவிலே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், குட்டுகளை பெற்ற அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது .இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து தலை குனிந்து தான் ஏற்பட்டுள்ளது . இதைத்தான்
எடப்பாடியார் திமுக ஆட்சியின் அவலங்களை குறித்து மக்கள் மன்றத்திலும், சட்டமன்றங்களும் எடுத்துரைத்து தோலுரித்துக் காட்டு வருகிறார்.

சனாதனம் தர்மம் சமூக நீதிக்கு எதிரானது டெங்கு, மலேரியா, காய்ச்சலை போல எதிர்க்க முடியாது ஒழிக்கத்தான் முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார் இதனை தொடர்ந்து உத்தர பிரதேஷ், மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இவர் மீது வழக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதயநிதி ஸ்டாலின் சாதாரண நபர் அல்ல ,மாநில அமைச்சர், உங்கள் பேச்சு மிகப் பெரிய பின்விளைவை ஏற்படுத்தும் என்று கடும் கண்டனத்தை அவர் மீது சுமத்தினர்.

அதேபோல விழுப்புரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய 60 பேர் பலி சம்பவத்தில் கழகத்தின் சார்பில் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று நீதிமன்றம் சென்றபோது நீதியரசர்கள் சிபிஐக்கு உத்தரவிட்டு அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதேபோல போதை பொருள் நடமாட்டம் குறித்து வழக்கு வந்த போது அதில் நீதியரசர்கள் தமிழகத்தில் போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது அது காவல்துறைக்கு தெரியுமா? பள்ளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே சிறப்பு புலனாய் குழு அமைத்து ஒப்படைக்க பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.

தற்போது கூட செவிலியர்கள் பிரச்சினைகளில் கூட உச்ச நீதிமன்றம் இலவச திட்டத்திற்கு பணம் இருக்கிறது ஆனால் செவியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா ? தமிழகம் எதற்கெடுத்தாலும் முன்னணியாக உள்ளது என்று பெருமையாக பேசும் அரசு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை ,லாக்கப் மரணங்கள் ,உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தமிழக அரசுக்கு கடுமையாக குட்டு வைத்துள்ளனர், மேலும் பாலியல் சம்பவத்தில் கூட கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது கூட கிட்னி திருட்டு வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதிகாரிகளை நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று தமிழக அரசு கூறியபோது,
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து தமிழக அரசின் யோசனையை ஏற்க முடியாது என கூறிவிட்டனர்.

அதேபோல ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றபோது அதையும் நிராகரித்து விட்டார்கள்.

இதற்கெல்லாம் மேலே அமைச்சரக இருந்த செந்தில் பாலாஜி,பொன்முடி ஆகியோர் நீதிமன்றம் மூலம் கடுமையாக கண்டனம் தெரிவித்த பின்பு இருவர் பதவியும் பறிக்கப்பட்டது.

எதற்கெடுத்தாலும் ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் என்றும் ,இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம் என்றும் அடிக்கடி பெருமையாக பேசி தங்கள் மீது உள்ள தவறை மூடி மறைக்க நினைக்கிறார் .

ஆனால் உண்மை நிலை என்றால் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம், லாக்கப் மரணங்களில் தமிழகம் முதலிடம், திமுக காங்கிரஸ் கொண்டு வந்த
நீட் தேர்வு எதிர்கொள்ள முடியாமல் மாணவர் தற்கொலையில் தமிழகம் முதலிடம், போதை பொருள் நடமாட்டத்தில் தமிழகம் முதலிடம்,
சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடம், பாலியல் சம்பவத்தில் தமிழகம் முதலிடம்.தற்போது இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்திய நாட்டின் இறையாண்மை காக்கும் நீதிமன்றங்கள் மூலம் இந்தியாவிலே கண்டனங்களும், குட்டும் வாங்கி முதலிடத்தில் உள்ள ஒரே அரசு ஸ்டாலின் திமுக அரசு, அதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு குட்டுவைத்து வீட்டுக்கு அனுப்பி, எடப்பாடியாரை தமிழக மக்கள் முதலமைச்சராக ஆக்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *