மதுரை மேலபொன்னகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்படுவதாக சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மாற்றுத்திறனாளியான மாற்றம் தேடி அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகனிடம் நேற்று தகவல் தெரிவிக்கவே, விரைந்து சென்ற அவர் நானே இரத்தம் தருகிறேன் என கூறி இரத்தக் கொடை வழங்கினார். நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை மறந்து உதவி செய்த பாலமுருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரையில் ரத்ததானம் வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு குவியும் பாராட்டு..!
