காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா
மதுரை அக்
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு மூத்த உறுப்பினர் த.மணிமாறன் அவர்கள்,மதுரை டி.எஸ்.பி நகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, வேஷ்டி, பேண்ட், சட்டைகள், சேலைகள், காலனிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி, மகிளா காங்கிரஸ் நகர் மாவட்ட தலைவி கமலா மதுரைவீரன் மற்றும் கிருஷ்ணகுமார், சக்திவேல், கோவிந்தராஜ், தினகரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
