தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை செப்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000 (பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும்


01.06.2009 முதல் அரசாணை எண் 234ன்படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தைத் தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15.000 வழங்கிட வேண்டும்.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்திருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்.


3 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை காலமுறை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.


கிராம ஊராட்சியில் பணிபுரிந்துவரும் ஊராட்சி செயலாளர்கள். தூய்மை காவலர்கள். தூய்மை பணியாளர்கள். மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள். சுகாதார ஊக்குநர்கள். ஊராட்சி கணினி உதவியாளர்கள் ஆகியோர்க்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி அதனை பிரதிமாதம் கடைசி வேலைநாளில் பெறும் வகையில் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் / கிராம ஊராட்சி செயலர் கையொப்பமிட வழிவகை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கணேசன் மாவட்ட செயலாளர். குமார் மாவட்ட பொருளாளர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *