மதுரை பெத்தானியாபுரம் அருகே கோவிலை இடிக்க இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பொதுமக்கள் தர்ணா
மதுரை செப்
மதுரை பெத்தானியாபுரம் அருகே உள்ள ஆசைத்தம்பி தெருவில் அமைந்துள்ளது வசந்த முத்து மாரியம்மன் கோவில். இந்த கோவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்த கோயிலை பிச்சை என்பவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த கோயில் இடத்துடன் சேர்த்து உள்ள வீட்டை கிரயத்திற்கு வாங்கி அந்தப் பகுதி பொதுமக்களுடன் இணைந்து பராமரித்து வந்துள்ளார்.
தற்போது அந்தக் கோயில் இடத்தை வாங்கிய நபர் அந்த பகுதி மக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கோயிலை அகற்ற வேண்டும் என்று அந்த நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை கோவிலை அகற்ற இருப்பதாக எழுந்த தகவலின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பொதுமக்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
