மதுரையில் மறைந்த இசை மேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 5-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
மதுரை செப்
மறைந்த இசை மேதை எஸ் பி பாலசுப்ரமணியனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி மதுரையில் நடைபெற்ற விழாவில் அவரது பாடல்களை பாடி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபற்றி விவரம் வருமாறு :-
மறைந்த இசை மேதை பத்மவிபூஷன் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசுதேவன், கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆடிட்டர் சேது மாதவா மற்றும் வாசுதேவன் வழங்கினார்.
தொடர்ந்து பாடகர்கள் ஜோசப், பரணி மகேஷ், வைபவ் மகேஷ் உள்ளிட்டோர் எஸ்.பி.பி பாடிய ஜாதி மல்லி பூச்சரமே.. சந்தோஷம் சந்தோஷம் வாழ்வில் ஊர்வலம் உள்ளிட்ட எஸ்.பி.பி யின் பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
