நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சேவையை கௌரவிக்கும் விதமாக மேயர் இந்திராணி கேடயம் வழங்கி பாராட்டு…!

நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சேவையை கௌரவிக்கும் விதமாக மேயர் இந்திராணி கேடயம் வழங்கி பாராட்டினார்

மதுரை ஆகஸ்ட் 15

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு, நன்கொடை வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சமூக சேவையை பாராட்டி அதன் நிறுவனத்தலைவர் ஸ்டார் குருசாமி அவர்களுக்கு, மேயர் இந்திராணி கேடயத்தை நினைவு பரிசாக வழங்கி பாராட்டினார்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *