மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.டி.ஆர் ஜான்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் மாநிலத் துணைத் தலைவரும், பி.டி.ஆர் ஜான்ஸ் ஹோட்டல் நிர்வாக இயக்குனருமான பி.டேனியல் தங்கராஜ், மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மாவட்டச் செயலாளர் அழகேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஸ்டாலின் சேகர், பரிமளநாதன், வெங்கடேசன், ராஜேந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *