வைகை நதியின் ஓசை நூல் வெளியீட்டு விழா..! ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்டார் குரு நூலை பெற்றுக் கொண்டார்.

வைகை நதியின் ஓசை நூல் வெளியீட்டு விழா..!

ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்டார் குரு நூலை பெற்றுக்கொண்டார்

மதுரை செப். 23-

சண் சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை மதுரை இலக்கிய பேரவை சார்பில் சண்முக திருக்குமரன் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, அறிவொளிச்சுடர் விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காந்தி மியூசியத்தில் நடைபெற்ற சண்முக திருக்குமரனின் நூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட “நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை” நிறுவனர் “ஸ்டார் குருசாமி, வைகையை பாதுகாக்கவும், அதன் தொன்மையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், வைகை நதியை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நூல் எழுதுமாறு முனைவர் சண்முகதிருக்குமரனை கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று சண்முக திருக்குமரன் வைகை நதியின் ஓசை என்ற நூலினை எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியிட்டு விழாவில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை சண் சரண் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வைஜெயந்திமாலா, பேராசிரியர் பாஸ்கரராஜன் ஆகியோர் வெளியிட, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குருசாமி பெற்றுக் கொண்டார். மேலும் சுமார் 1000 புத்தகங்களை பெற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இந்த விழாவில் பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *