மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியில் கோலாகலமாக நடந்த “யாதுமானவள் நிகழ்ச்சி…!

மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியில் “யாதுமானவள் நிகழ்ச்சி

மதுரை செப் 18

மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியில் “யாதுமானவள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை வெஸ்ட், விருதுநகர் மற்றும் ரோடாராக்ட் கிளப் இணைந்து நடத்திய “யாதுமானவள்” என்ற தலைப்பில், பெண்கள் அதிகாரப்படுத்தல் குறித்து 117-வது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற உன்னத உரையாளர் டாக்டர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவியருக்கு மன உறுதியும், இலட்சியப் பார்வையும் கொண்ட உரையை வழங்கினார்.


நிகழ்ச்சியின் திட்டத் தலைவராக Rtn. விஜயகுமாரி அவர்கள் செயல்பட்டார். முக்கிய நபர்களாக, Rtn.பழனியப்பன், Rtn.கிறிஸ்டோபர் ஞானராஜ், Rtn.குருசாமி, Rtn.பெத்தநாச்சி மற்றும் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மாணவியருக்கான தன்னம்பிக்கை மற்றும் சிந்தனையூட்டும் விழிப்புணர்வு நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *