திருப்பூரில் இளம்பெண்ணை கொலை முயற்சி செய்த நபருக்கு எதிராக குண்டர் சட்டம் பதிவு செய்யக் கோரி புகார் மனு..!

திருப்பூர் இளம்பெண்ணை இரண்டாவது முறையாக கொலை செய்ய முயற்சி செய்த நபருக்கு எதிராக குண்டர் சட்டம் பதிவு செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் இளம்பெண்ணை இரண்டாவது முறையாக கொலை முயற்சி செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் பி.பி.ஏ பட்டதாரி தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்
இவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் செய்யது முகமது என்பவர் கடந்த 30.07.2025 அன்று இரவு 7.30 மணியளவில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கொலை முயற்சி செய்ய தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 15.வேலம்பாளையம் காவல் நிலையத்தில் 10.05.2023, 01.12.2023 ஆகிய தேதிகளில் கடத்தல் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் சம்பவங்கள் நடைபெற அதற்கும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன,
தற்போது, அந்த பெண் பலத்த காயங்களுடன் ICU வில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தாக செயல்படும் செய்யது முகமது என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை திருப்பூர் மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மயில் மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *