நேபாளில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டிகளில் 9 தங்கம் ஒரு வெள்ளி பெற்று திரும்பிய திருப்பூர் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சர்வதேச போட்டிகளுக்கான தேர்வு மற்றும் ஆசிய அளவிலான தடகள யோகா போட்டிகள் நேபாளில் நடைபெற்றது இதில் இந்தியா சார்பில் 250 பேர் கலந்து கொண்டனர் அதில் தமிழகத்தில் இருந்து 50 பேர் போட்டியிட்டனர்
மேலும் ஆசிய அளவிலான இந்த போட்டியில் சீனா இந்தியா மலேசியா சிங்கப்பூர் , பூடான், நேபாள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் அன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 10 பேர் போட்டியிட்ட நிலையில் 9 தங்கம் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று திரும்பி உள்ளனர்.
ரயில் மூலம் திருப்பூர் திரும்பிய அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க வேண்டும் என்பது தங்கள் லட்சியம் என தெரிவித்தனர்.
கலாம் நியூஸ் டிவி
செய்திகள் மயில் மணி
