மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்..

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வழிகாட்டுதலின்படி, மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் வி.டி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் மணிவேல், மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பகவதி வரவேற்று பேசினார்.
மதுரை சுற்று வட்டார பகுதியில் அமைந்துள்ள கள்ளர் பள்ளியில் பெயர் மாற்றத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அதற்கான போராட்ட செயல் திட்டங்களில் உருவாக்கி போராடுவது, அரசு உடனே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விரைவில் அஇமூமுக மாநில மாநாடு நடத்துவது என்றும், கூட்டத்துக்கு தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை அழைப்பது எனவும், சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையில் இணைந்து செயல்படுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொறியாளர் இரா.கோபாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர்.இக்கூட்டத்தில் மாநில இணை பொதுச்செயலாளர் பிரபு, மாவட்டச் செயலாளர் பகவதி, மாநில இணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் வைகை பத்மநாபன், மாநில தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ்,மாநில துணைத்தலைவர் தர்மராஜ், மாநில துணைத்தலைவர் தமிழரசன்,மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம், மதுரை மண்டல தலைவர் எஸ்.எம்.நாகராஜ் தேவர், மாநில தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் ஷோபனா, மாநில தொண்டரணி செயலாளர் ராஜ்குமார், வழக்கறிஞர் மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன், ஈரோடு மாயத்தேவர், மதுரை மாவட்ட தலைவர் பள்ளம் ஓச்சாதேவர்,மாவட்ட பொருளாளர் ராமசாமி, புறநகர் மாவட்ட செயலாளர்கள் கதிரேசன், மணிபாண்டி, ஈஸ்வர பாண்டி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *