விழியோர கவிதை” திரைப்படத்தின் இசைத்தட்டை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு வெளியிட்டார்.

“விழியோர கவிதை” திரைப்படத்தின் இசைத்தட்டை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு வெளியிட்டார்.

மதுரை ஆகஸ்ட் 01

மதுரை திருப்பரங்குன்றத்தில் “விழியோர கவிதை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை திரைப்பட இயக்குனர் கே.கதிரவன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட “நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை” நிறுவனர் “ஸ்டார் குரு” குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, இசைத் தட்டை வெளியிட்டார்.

பின்னர் அறக்கட்டளை சார்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவை அவர் வழங்கினார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *