மதுரை விளாங்குடியில் நியாயவிலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்
மதுரை ஆகஸ்ட் 01
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி 20 வது வார்டில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விளாங்குடி காமாட்சி நகர் 5வது தெருவில் புதிய நியாய விலை கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், முத்துமாரியம்மன் கோவில் அருகில் மற்றும் ஜீவானந்தம் தெருவில் போர்வெல் கிணறு (சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி) உள்ளிட்டவைகளை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
மேலும் 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பரவை ராஜா, உசிலை ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார், சோலை ராஜா, கே.ஆர்.சித்தன், கவுன்சிலர் நாகஜோதி சித்தன், நீதிகாந்த், சந்தைப்பேட்டை ஆர்.பாலமுருகன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி,விஜயகுமார், ஜஸ்டிஸ் ராஜா, நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
