கூடல்நகரில் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
மதுரை ஆகஸ்ட்
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே ராஜூ அவர்கள் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மதுரை மாநகராட்சி 02-வது வார்டு, கூடல்நகர் பகுதியில் கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை,முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆர்.ஜே.தமிழ்மணி டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி ராஜூ மற்றும் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம் எஸ் பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், திரவியம், பரவை ராஜா, வி.பி.ஆர் செல்வகுமார், கே.ஆர்.சித்தன்,
வட்டக்கழக செயலாளர்கள் ஜஸ்டிஸ் ராஜா, சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி, விஜயகுமார், நாராயணன் மற்றும் விளாங்குடி முத்துமுருகன், பால்பாண்டி, பாவலர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
