சென்னையில் மாற்றுத்
திறனாளிகள் முன்னேற்றக் கழகம் சார்பாக கருத்து கேட்புக் கூட்டம்.
சென்னை,ஆக-20.
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக்கழகம் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி, சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளையும், நிர்வாகி எம்.பாண்டியன் வரவேற்று பேசினார்,
சென்னை மாவட்டம் சார்பில், சொக்கலிங்கமும், செங்கல்பட்டு எம்.சகாதேவன், காஞ்சிபுரம் பீமராஜ், திருவள்ளுவர் மருதராஜ் ஆகியோர் பேசினர்.
மாற்றுத்திறனாளிகளின் மாற்று சிந்தனை…. நமது ஒற்றை விரல் நடக்கானது என்ற தலைப்பில் மூத்த நிர்வாகி மதுரை சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றி, மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தேனி மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.
