மதுரை ரயில்வே காலனி மல்லிகை குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ நலம் தரும் வலம்புரி விநாயகர் திருக்கோவில் 09-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை ரயில்வே காலனி மல்லிகை குடியிருப்பில் அமைந்திருக்கும், அருள்மிகு ஸ்ரீ நலம் தரும் வலம்புரி விநாயகர் திருக்கோவில் 09-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஆர்.எம்.யூ கோட்டச் செயலாளர் ஜே.எம்.ரபீக் மற்றும் கோட்ட தலைவர் செந்தில்குமார், பெட் கிராட் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராம், பாஜக மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், எஸ்.ஆர்.எம்.யூ உதவி கோட்ட செயலாளர் ஜீவியன், குருநாதர் பாலாஜி சுவாமி, 59-வது திமுக வட்டக் கழக செயலாளர் அழகுசுந்தரம், டாக்டர் வீரேந்திரன், நாட்டாமை எஸ்.பி சுந்தர்,திமுக வட்ட பிரதிநிதி பாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் கலைச்செல்வன், ஆலோசகர்கள் சிவபாலன், சுரேஷ் பண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்..
