சென்னையில் சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள்…!

சென்னையில் சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள்…!

மதுரை ஆகஸ்ட்

சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் கோச்சடை டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய மேக் ஜிபிடி என்ற உலகின் முதல் ஏ.ஐ இயக்கும் எல்ஓடி ஹார்ட்வேர் மேடை அறிமுகமானது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பி. தியாகராஜன் தலைமையில் ZeroToOne: GenAI Product Day இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில்
மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மாபெரும் உழைப்புடன் உருவாக்கிய மீனாட்சி அம்மன் கோவில் சிறுபிம்பம் (Miniature)-ஐ இந்நிகழ்வில் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

மாணவிகள் செய்த இந்த கலைப்பணியை முதன்மை விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டியதோடு, அதில் இடம் பெருமை உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தலைவர்கள், இந்த சிறப்பான முயற்சியை பாராட்டி, இணைந்த கல்வி மற்றும் கலையைச் சொரூபமாகவும், பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக மாணவிகள் செய்யும் இந்த செயல்கள் பாராட்டுக்குரியவை” என பாராட்டினர்.இந்த சிறுபிம்பம், மதுரையின் பெருமையை மாணவிகளால் கலை வடிவில் எடுத்துக்காட்டும் சிறந்த முன்மாதிரி என அனைவராலும் பாராட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *