முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழகம் முழுவதும் மக்களை காப்போம்.! தமிழகத்தை மீட்போம்…! என்ற லட்சியத்தோடு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் அவர் செல்லும் வழியெல்லாம் அவருக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாநகருக்கு வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து முன்னாள் அமைச்சரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் பகுதி வாரியாக சென்று தொண்டர்களிடையே எழுச்சியுடன் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் வடக்கு 2- ம் பகுதி அ.தி.மு.க.சார்பில் அதன் பகுதி செயலாளர் வி.கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனைகளை வழங்கி பேசினார். தொண்டர்களும்,நிர்வாகிகளும் எடப்பாடியாரை மதுரை மாநகர் குலுங்க சிறப்பாக வரவேற்போம் என கூறினர்.
இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன்,அண்ணாத்துரை, பா.குமார், பேராசிரியர் ஜெயபால், ஜெயவேல், வி.பி.ஆர்.செல்வகுமார், பாவலர் ராமச்சந்திரன் மற்றும் எஸ்.முருகன், முத்துக்குமார், எஸ்.ரவி, எம்.தினேஷ்குமார், சுந்தரபாண்டி, ராகவி, என்.பாண்டிசெல்வம், பி.பால்பாண்டி, ஏ.ஆர்.வேல்மணி, பீ.பீ.குளம் மகேந்திரன், எம்.ஜி.ஆர்.ஹோட்டல் கண்ணன், எம்.பாண்டித்துரை, எம்.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
