மதுரையில் அகண்ட இந்து ராஷ்டிரா சார்பில் ரக்ஷா பந்தன் விழா: பாலியல் வன்முறையை கண்டித்து உறுதிமொழி ஏற்பு
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகண்ட இந்து ராஷ்டிரா நிறுவனத் தலைவர் பா.கருணாநிதி தலைமையில் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் வேளிர் மக்கள் கட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஐயப்பராஜா, மாவட்ட துணை தலைவர் முரு. கணேசன், ஓ பி சி அணி மாவட்ட தலைவர் ரேணுகா, மதுரை மாவட்ட பாஜக அலுவலக செயலாளர் சுரேஷ், துறவிகள் மாநிலத் தலைவர் ஆனந்தா சுவாமிகள், எஸ் எஸ் காலனி மண்டல தலைவர் கணேஷ் பாண்டி, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சிலர் ஆஃப் இந்தியா மாநில தலைவர் பிச்சைவேல், முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பூவை மா.ஜெயக்குமார் தேவர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்கள் சகோதர தத்துவத்தை வலியுறுத்தி ராக்கி கயிறு கட்டினர். அதோடு பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை கண்டித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக எஸ் எஸ் காலனி நாவலர் தெருவில் அகண்ட இந்து ராஷ்டிரா தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
