திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட களக்காடு நகரில் அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ள களக்காடு நகரைச் சேர்ந்த பி.சுதன் அஸ்வின் என்ற மாணவருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா MLA, மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex MLA ஆகியோர் ஏற்பாட்டில், நெல்லை மாவட்டக் கழகம் சார்பில் மடிக்கணினி மற்றும் ரூபாய் ஒரு லட்சம் உதவித்தொகை ஆகியவற்றை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் வழங்கி மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் Ex.MLA, மருதூர் இராமசுப்பிரமணியன், விஜயநாராயணம் அசோக்குமார், களக்காடு இராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்.
