மதுரையில் அகில இந்திய சிகை மற்றும் அழகுக்கலை சங்கம் தமிழ்நாடு 07-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய சிகை மற்றும் அழகுக்கலை சங்கம் தமிழ்நாடு 07-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஐ.பா தென்னிந்திய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு கௌரவத் தலைவர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சென்னை,மதுரை, திருச்சி,கோவை,சேலம், நெல்லை,ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அழகு கலை நிபுணர்களுக்கு அழகு கலை சார்ந்த பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக சென்னையில் 1875 பேர் ஒரே இடத்தில் மணப்பெண் சேலை கட்டும் சாதனை நிகழ்ச்சி மற்றும் ஒப்பனை செய்து சாதனை படைத்தனர்.

இதில் பங்கு பெற்றோருக்கு மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வேர்ல்டு ரெக்கார்டு ஆப் யூனியன் சார்பாக சான்றிதழை தேசிய செயலாளர் அந்தோணி டேவிட், தமிழ்நாடு மாநில தலைவர் திருமதி சீனாமினி ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் நன்றியுரை கூறினர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *