மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியில்
“FUSION 2025″-மாநில அளவிலான போட்டி
மதுரை செப்
மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியில்
“FUSION 2025″-மாநில அளவிலான இடைக்கல்லூரி போட்டி மிக பிரமாண்டமாக நடைப்பெற்றது.
மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான இடைக்கல்லூரி மாணவிகளுக்கிடையே “FUSION 2025 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் ரங்கோலி, புதையல் தேடல், ஊமை நாடகம், நாட்டுப்புற நடனம், குறும்படம் உள்ளிட்ட 11 விதமான போட்டிகள் நடந்து மாணவிகளின் பல்துறை ஆற்றல்களும் வெளிக்கொணரப்பட்டன.
முதல் பரிசான ₹10,000 ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசான ₹7,000 ரூபாய், மூன்றாம் பரிசு ₹5,000 ரூபாயை வெற்றி பெற்ற மாணவிகள் தட்டிச் சென்றனர்.
நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக கல்லூரியின் தலைவர் ஜவஹர் பாபு, தாளாளர் எம்.வி.ஜனரஞ்சனிபாய், செயலாளர் என்.எம்.ஹெச் கலைவாணி, முதல்வர் கே.எஸ்.கோமதி, துணை முதல்வர் எஸ்.மஹிமா மற்றும் நிர்வாக அதிகாரி என்.எஸ்.ஶ்ரீரேகா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை மாணவிகளின் கலையுணர்வும், போட்டித் திறமையும், நிர்வாகத் திறன்களும் வளரும் ஒரு தளமாக மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
