இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை கோச்சடை அருகே உள்ள அங்காள ஈஸ்வரி T.P.M ராதா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் செயலாளர் ஜி.இளமுருகன், பொருளாளர் பி.மோகன்தாஸ், உபதலைவர் ஆறுமுகம், இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்பட செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
