முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
மதுரை ஆகஸ்ட் 02
மதுரை கரிமேடு அருகே உள்ள ராஜேந்திரா 03-வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 53-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, நடந்த மாபெரும் மாபெரும் அன்னதானத்தை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிருஷ்ணவேணி, முனியாண்டி கோவில் பூசாரி ஏ.பி குமார், ராஜசேகர்,துளசி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் பால்ராஜ், முத்துலட்சுமி, நிர்வாகிகள் கருப்பசாமி, லட்சுமி நாராயணன், பாலமுருகன், சிவகுருநாதன், மற்றும் மகளிர் குழுவினர் மீனாதேவி,ருக்குமணி, வள்ளியம்மாள்,புஷ்பா, பாக்கியலட்சுமி,சுகந்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முத்துக்குமார், மனோஜ், நம்பிசெல்வம், கிஷோர்குமார், சிவசந்துரு, உதயகுமார், அற்புதராஜ், லோகநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
