சட்டவிரோத குவாரிக்கு அபராதம் குறைப்பிற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை ஜூன் 04
சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு அபராத தொகையை குறைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை ஆபெல் மூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளால் அருகிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றன. அவை வளத்தை இழந்து, தரிசு நிலங்களாக மாறி விடுகின்றன. கனிமங்களை வெட்டி எடுக்க அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அருகிலுள்ள குடிருப்புகளில் விரிசல் ஏற்படுகிறது. அவை இடிந்து விழக்கூடுமோ அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் காது கேளாமை தூக்கமின்மையால் அவதி
படுகின்றனர். நீர் மாசுபட்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
சட்டவிரோத குவாரி கப்பட்ட வரம்பிற்கு மீறி வெட்டி கனிமங்களை கள் மற்றும் அனுமதிக் எடுக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர், இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் குற்றவியல் சட்டப்படி என உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதாவது சட்டவிரோதமாக தோண்டுவதை குற்றமாக கருத வேண்டும் என்பதையே அத்தீர்ப்பு மறைமுகமாக உறுதிபடுத்துகிறது
தமிழக இயற்கை வளங்கள் துறை ஜன.,22ல் ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி வரம்பை மீறி கனிமங்கள் குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அளவை விட கனிமங்களை வெட்டி எடுத்தால், குத்தகைக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் குவாரி அமைத்தால் ஒரு வரைமுறைப்படுத்த
திட்டம்’ என்ற அடிப்ப டையில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.25 அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
அபராத தொகையில் முதலில் செலுத்திவிட்டு, 20 சதவீதத்தை மட்டும் செலுத்தி விட்டு சம்பந்தப்பட்ட நபர்கள்
குவாரி நடவடிக்கைகளை தொடரலாம்.
மீதம் 80 சதவீதத்தை ஒவ்வொரு 2 – மாதங்களுக்கு ஒருமுறை வீதம், 6 தவணைகளாக செலுத்தலாம்.
கல் குவாரி, கிரஷர்லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 2024 மே 31 ல் அறிக்கை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் உள்நோக்குடன் அரசாணை வெளியிடப்பட்டது.
மக்கள் கருத்துக்களை தெரிவிக்க எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் அரசாணை பிறப்பித்தது ஏற்புடையதல்ல. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதை அதுவரை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.சதீஷ் குமார், எம். ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் லக்ஷமன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக இயற்கை வளங்கள் துறை, கூடுதல் தலைமைச் செயலர்,கனிமவளத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூன் 24 க்கு ஒத்தி வைத்தனர்.
