தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய மக்கள் சட்ட உரிமைகள் கழகம்..

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய மக்கள் சட்ட உரிமைகள் கழகம்

மதுரை ஜூன் 05

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனி அருகே செயல்பட்டு வந்த சோபா தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் சோபா தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றி, அதன் அருகில் இருந்த ஏழு வீடுகள் மற்றும் இரண்டு செட்டுகள் தீக்கிரையாகி பெரும் சேதமடைந்தன. பல குடும்பங்கள் தங்களது உடைமைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தனர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயபாலன், அமைப்பின் நிர்வாகிகளுடன் நேரில் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, மக்கள் சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகளின் ஏற்பாட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை டாக்டர் ஜெயபாலன் வழங்கினார்.

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது சமூகத்தின் கடமை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், தீ விபத்தில் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பங்களின் துயரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்றும், தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் பிரியா கிருஷ்ணன், வர்த்தகரணி நிர்வாக செயலாளர் பிஸ்மி சாகுல், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக செயலாளர் இளவரசன், மாற்றுத்திறனாளி அணியை சேர்ந்த சபீனா, மாவட்ட புரவலர் நசீர், முகமது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைப்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிஸ்மி சாகுல், திருமதி ராணி, சுசிலா, திருமதி பிரியா கிருஷ்ணன் ஆகியோரின் பணியை பாராட்டிய டாக்டர் ஜெயபாலன், அவர்களுக்கு தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


தீ விபத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் இந்த மனிதநேய செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சமூக அக்கறையுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ளப்பட்ட இந்த நிவாரண உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *