திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் ரூபாய் மோசடி
மதுரை ஜூலை 31
திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி பனியன் குடோன் நடத்தி வருகிறார்.இந்நிலையில் குமாரசாமி பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் டையிங் நிறுவனம் நடத்தி வரும் ஆறுமுத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகசெந்தில் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் தொழில் ரீதியாக குமாரசாமிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில்.,குமாரசாமி யிடமிருந்து நாகசெந்தில் மற்றும் இளையராஜா இருவரும் கடனாக 35-லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கொடுக்காமல் கடந்த ஒரு வருடமாக மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பணத்தை மீட்டுத் தரக் கூறி
குமாரசாமி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், பணத்தை திருப்பி கொடுக்காமல் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட குமாரசாமி உட்பட 20க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
