வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 -வது பிறந்த தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவனேசன் தலைமை வகித்தார், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் பேரூர் திமுக அவைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆவூர் அன்பு பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சிக்கொடி ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்று, கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் க. தனித்தமிழ்மாறன், பேரூர் திமுக பொருளாளர் புருஷோத்தமன், பேரூர் துணை செயலாளர் வி.சி.ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி எஸ். ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத் தெரு எஸ். ஆர். ராஜேஷ், சதானந்தம், புலவர் சிவ. செல்லையன், வில்வம், கௌதம ராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம. மாணிக்கவாசகம், க. செல்வம், பானுமதி vcr, ரம்ஜான்பீவி சிவராஜ், வீரமணி, நூர்ஜகான் ஜெகபர் அலி, ஆனந்த், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், 6-வது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.